ஆத்தாடி.. ஒரே ஆண்டில் 9940 ஆணுறைகளை ஆர்டர் செய்த டெல்லிவாலா.. !

Jan 02, 2024,05:44 PM IST
டெல்லி: பிளிங்கிட் தளம் மூலமாக ஒரே ஆண்டில் 9940 ஆணுறைகளை டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளாராம்.

இந்தத் தகவலை பிளிங்கிட் நிறுவனத்தின் நிறுவனர் அலிபிந்தர் தின்ட்சா தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டில் பிளிங்கிட் தளத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில்தான் இந்த சுவாரஸ்யமும் அடங்கியுள்ளது.

ஸ்விக்கி, சொமேட்டோ போல பிளிங்கிட்டும் ஒரு செயலிதான். கடந்த காலத்தை விட 2023ம் ஆண்டில் இந்த நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாம். அதாவது இதன் வருவாய் ரூ. 724 கோடியைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் இந்த தளத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்...



தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 2023ம் ஆண்டு பிளிங்கிட் மூலமாக 9940 ஆணுறைகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இதேபோல இந்த ஆண்டு 80,267 கங்காஜல் புனித நீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. 30 லட்சத்து 2 ஆயிரத்து 80 பார்ட்டிஸ்மார்ட் மாத்திரைகள் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

21 ஆயிரத்து 167 பாரோலைன் யூனிட்டுகள் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஒரே மாதத்தில் 38 அன்டர்வேர்களை வாங்கியுள்ளார். குருகிராம் நகரிலிருந்து ஒரே ஆண்டில் 65,973 லைட்டர்கள் விற்பனையாகியுள்ளன என்று பிளிங்கிட் நிறுவனர் அலிபிந்தர் தின்ட்சா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்