டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிரடியாக ஜெயிக்க வேண்டும். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக வேண்டும். அப்படி நமது வெற்றி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து மாநில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது. அதில் அமித் ஷா முக்கிய உரையாற்றினார். அப்போதுதான் இப்படிக் கூறினார் அவர்.
அமித்ஷாவின் பேச்சிலிருந்து:
வீடு வீடாக போங்கள். நமது கட்சியின் கொள்கைகளையும், பாஜக அரசுகள் மாநில அளவிலும், மத்திய அளவிலும் செய்து வரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணிகளை எடுத்துக் கூறுங்கள். மீண்டும் நரேந்திர மோடி மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும்.
2019ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 10 சதவீத வாக்குகளை நாம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதை உறுதிப்படுத்துங்கள். (2019 தேர்தலில் பாஜக 37 சதவீத வாக்குகளையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 45 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது).
சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி. அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் பெற்ற ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே.
முதல் முறை வாக்களிப்போரை கவர முயற்சியுங்கள். அரசின் பல்வேறு நலப் பணிகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரையுங்கள். எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் எதிர்மறைப் பிரச்சாரம் குறித்து அவர்களுத்து தெளிவுபடுத்துங்கள்.
நாம் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். நாம் பெறப் போகும் வெற்றி எதிர்க்கட்சிகளை அதிர வைக்க வேண்டும். அப்படி வெல்ல வேண்டும் என்றார் அமித் ஷா.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}