சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் 2025ம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி ஆறாம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஆளுநர் உரை மட்டும் இடம் பெறும். ஆளுநர் முதலில் தனது உரையை ஆங்கிலத்தில் படிப்பார். அதைத் தொடர்ந்து தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். பிறகு சபை அன்றைக்கு ஒத்திவைக்கப்படும்.

அதன் பிறகு சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும்.
இதுதொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் ஆறாம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை மண்டபத்தில் கூடும். அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 124(1)ன் கீழ் உரை நிகழ்த்த உள்ளார்கள் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் விவாதமின்றி இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. அரசுடைய எண்ணம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு சட்டபேரவை கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பது தான். இருந்தாலும் தேவைப்படுகின்ற நாட்களை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு தமிழக மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ சட்டப்பேரவை குறைந்த நாட்களாக இருந்தாலும் அதில் செய்கின்றனர். சட்டமன்ற கூட்டத்தொடர் பத்து நாள் கம்மியாக நடந்ததால் மக்களுக்கு செய்ய வேண்டிய எந்த பணிகளும் பாதிக்கவில்லை. ஆக இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூடுதல் மானிய கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்பதால் சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்கள் நடத்தப்பட்டது.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முழுமையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி எதிர்க்கட்சித் தலைவர்
நேரமில்லா நேரத்தில் பேசியபோதும் அனுமதி வழங்கப்பட்டது என்றார் அவர்.
கடந்த சட்டசபைக்கு கூட்டத்தொடரில் ஆளுநர் முரண்பாடுகளுடன் முதல் மற்றும் கடைசி பக்கங்களை மட்டுமே வாசித்தார் என்ற ஆளுநர் குறித்த கேள்விக்கு, ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன் என்றார் சபாநாயகர் அப்பாவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
{{comments.comment}}