டெல்லி: 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மொத்தம் 22,217 தேர்தல் பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் 187 பாண்டுகளைத் தவிர மற்றவை பணமாக்கப்பட்டு விட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
தேர்தல் பாண்டுகள் எனப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை ஒப்படைக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த விவரங்களை பென்டிரைவில் போட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது எஸ்.பி.ஐ. இந்த விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை மாலைக்குள் தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தான் கொடுத்த டேட்டா குறித்த விவரத்தை சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்டாக தாக்கல் செய்துள்ளது எஸ்.பி.ஐ. 2 பிடிஎப் பைல்களாக பென் டிரைவில் விவரத்தை போட்டுக் கொடுத்துள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதில், 187 பாண்டுகள் மட்டுமே இன்னும் பணமாக்கப்படவில்லை. மற்றவை பணமாக்கப்பட்டு விட்டன. 187 பாண்டுகளுக்குரிய பணத்தை எடுத்து பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர விதிமுறைப்படி , யார் வேண்டுமானாலும் இந்தப் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கலாம். கொடுக்கப்படும் பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக்கி விட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்தப் பணம் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு விடும் என்பது விதியாகும்.
தற்போது இந்த பென் டிரைவில் உள்ள விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடும்போதுதான் யார் யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}