டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் இறந்துள்ள சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த இரட்டை என்ஜின் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பரிதாபமாக 24 பேரின் உயிர் பறி போயுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது.
தவறு இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}