சென்னை: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய மேம்பாலம் ஆகும். இந்த பாலம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். கத்திப்பாரா மேம்பலத்தின் மீது இன்று காலை 10 மணியளவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். வந்தவர் திடீர் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து விட்டார். மேலிருந்து கீழே குதித்ததால் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை பரிசோதித்தில் அவர் இறந்திருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பந்தமாக புனித தாமஸ் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், உயிரை மாய்த்துக் கொண்டவர், விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பதும் வயது 24 என்றும் தெரியவந்தது.மேலும், அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று மும்பையில் இதே போல் அடல் சேது கடல் பாலத்தின் மீது காரில் வந்த ஒருவர் மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி பாலத்தில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்தது. அதே போல இன்று சென்னையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எதற்குமே முடிவல்ல.. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க. மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டி விடுங்க. ஷேர் செய்யாமல் இருப்பதால்தான் பலருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதைப் போக்கி விட்டால் இதுபோன்ற எண்ணங்கள் வராது.
ஒரு வேளை உங்களுக்கு விரக்தி அதிகரித்து, உயிரை விடும் எண்ணம் மனதில் தோன்றினால் யோசிக்காமல் யாருடனாவது பேசி விடுங்கள்.. அவர்களிடமிருந்து உங்களுக்குத் தீர்வு கிடைக்கலாம்.. அல்லது இந்த எண்ணை ( iCALL- 9152987821) தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை கேளுங்கள்.. வாழ்க்கை அழகானது.. அதை அழகாக வாழ்வோம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}