சென்னை: திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்.. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு... என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் 24வது மாணவர் தற்போது உயிரிழந்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது மு.க. ஸ்டாலின் உணர்வாரா?
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-
திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!
ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.
இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
NEVER EVER GIVE UP!
தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.
Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!
ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்
இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!
என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!
அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!
நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!
{{comments.comment}}