டெல்லி: புத்தாண்டையொட்டி சனிக்கிழமை ஒரே நாளில் பிரியாணியை செம பிடி
பிடித்துள்ளனர் இந்தியர்கள். நாடு முழுவதும் ஸ்விக்கி நிறுவனம் மட்டும் 3.5
லட்சம் பிரியாணியை டெலிவரி செய்து அதிர வைத்துள்ளது.
டிசம்பர் 31ம்
தேதி அவர்கள் எடுத்த ஆர்டரில் 75.4 சதவீதம் ஆர்டர்கள் ஹைதராபாத்
பிரியாணிக்கு போயுள்ளது. அடுத்த இடம் லக்னோவி பிரியாணி.. இதை 14.2 சதவீதம்
பேர் வாங்கியுள்ளனர். கொல்கத்தா 10.4 சதவீதத்துடன் 3வது இடத்தைப்
பிடித்துள்ளது.
.jpg)
இதுதவிர நாடு முழுவதும் 61,000 பீட்சாக்களையும்
டெலிவரி செய்துள்ளது ஸ்விக்கி. நேற்று ஸ்விக்கி டெலிவரி செய்த உணவுகளிலேயே
பிரியாணிதான் முதலிடத்தில் உள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த
பிரபலமான பவார்ச்சி ஹோட்டல், கடந்த 2021ம் ஆண்டு புத்தாண்டின்போது
நிமிடத்திற்கு 2 பிரியாணி வீதம் சப்ளைசெய்து சாதனை படைத்திருந்தது. இந்த
ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவர்கள் 15 டன் பிரியாணி செய்து சப்ளையில்
பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டனராம்.
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், சனிக்கிழமை இரவு 7 மணி வரை 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்களை டெலிவரி செய்துள்ளது.
ஆணுறைகளுக்கும் பஞ்சமே இல்லை
அதேபோல
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், சனிக்கிழமை 2757 டூரக்ஸ் ஆணுறைகளை டெலிவரி
செய்துள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் பல்வேறு பொருட்களையும்
வாடிக்கையாளர்களுக்கு சப்ளைசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}