சென்னை: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சுமார் 800 சுங்கச் சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணமாக முன்னர் எல்லாம் ஓட்டுனர்களிடம் இருந்து ரொக்கமாக பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் இணைய வழியில் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. இந்த கட்டண முறை ஆண்டிற்கு 2 முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் பல சுங்கச் சாவடிகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடிக்கு எதிராக நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். பல இடங்களில் காலாவதியாகி விட்ட சுங்கச் சாவடிகளாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை நீக்க வேண்டும் என்று நேற்றுதான் அமைச்சர் எ.வ. வேலு கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் தி.மலை மாவட்டம் காரியமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் நங்கிளி கொண்டான், சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்றுவர ரூபாய் 60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 95 முதல் 600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூபாய் 55 முதல் 370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 85 முதல் 555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}