கோவை: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், ஆகிய மூவரும் கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தண்டவாளத்தில் மூன்று பேரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (45), அவரது மகன் யுவராஜ் (16 ), மகள் ஜனனி ( 15) ஆகியோர்தான் தற்கொலை செய்தவர்கள் என்று தெரியவந்தது. மூவரும் வியாழக்கிழமை போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அந்த வழியாக வந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}