டெல்லி: 2024-25ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். இந்த முறை மக்களவைத் தேர்தல் காரணமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்தார். அப்போது அவர் அடுத்த முறை ஆட்சி அமைத்த பின்னர் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் , சுமார் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் நிறுவப்பட்டு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்திட்டத்தில் 1.28 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலமாக மின்சாரம் தேவை குறையும் என்றும், மின்பற்றாகுறையும் சரி செய்யப்படும்கிறது. மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இதன் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ம் நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}