கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிட்டங்கியில் பயங்கர விபத்து.. 7 பேர் பலி

Jul 29, 2023,10:38 AM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பழைய பேட்டை என்ற இடத்தில் உள்ள பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட மிகப் பெரியதீவிபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கிருஷ்ணகிரி அருகே பழைய பேட்டை என்ற இடத்தில் ஒரு பட்டாசு கிட்டங்கி உள்ளது. முறைப்படி அனுமதி வாங்கியே இது செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கிட்டங்கி அருகே ஏராளமான வீடுகளும்  உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை திடீரென பட்டாசு கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி பெரும் தீபிடித்துக் கொண்டது. இதில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர்.



கிட்டங்கி அருகே உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அந்தப் பகுதியே பெரும் போர்க்களம் போல காணப்படுகிறது. மக்கள் அலறி அடித்து ஓடியபடி இருந்தனர். சூளகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்ரும் பலமாக வீசி வருவதால் தீயை அணைப்பது சிரமமாக உள்ளது.

மீட்புப் பணி விரைவாக நடந்து வருகிறது. மேலும் யாரேனும்உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.  உயர் அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்