டில்லி : மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குஜராத்தில் அதற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி ஒரு முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதே சமயம், கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆளும் இடதுசாரி கூட்டணியை ஒரு தொகுதியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் இடைத்தேர்தல்:
குஜராத்தில் உள்ள விசாவதார் (Visavadar) சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி (AAP) வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா இந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
இருப்பினும், குஜராத்தில் உள்ள காடி (Kadi) தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அங்கு அக்கட்சி ஈஸியாக வென்றுள்ளது.
கேரளா இடைத்தேர்தல்:
கேரளாவில் உள்ள நிலம்பூர் (Nilambur) சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆர்யாதன் சௌக்கத் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இது கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு (LDF) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் பாஜக தோல்வி
மேற்கு வங்காள மாநிலம் கலிகாஞ்ச் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் திரினமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் இடைத் தேர்தல் - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளரை விட 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதியில் இதுவரை ஒரு முறை கூட பாஜக வென்றதில்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 6 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}