கேரளாவில் விபரீதம்.. ரயில் மோதி.. தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பரிதாப மரணம்!

Nov 02, 2024,05:30 PM IST

பாலக்காடு:  கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரனூர் பாலத்தின் மீது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


ஷோரனூர் அருகே பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள்.




அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேலை பார்த்து வந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் இதில் உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண், ரயில் மோதிய வேகத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்ற 3 உடல்களையும் மீட்ட போலீஸார் தற்போது ஆற்றில் விழுந்த தொழிலாளரின் உடலையும் தேடி வருகின்றனர்.


உயிரிழந்து உடல்கள் மீட்கப்பட்டவர்கள் வள்ளி, ராணி மற்றும் லட்சுமணன் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் பெயர் தெரியவில்லை. நான்கு பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி இவர்களை பணியில் ஈடுபடுத்தினர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்