ஒரே ஒரு லிங்க்.. தொட்ட அடுத்த விநாடியே.. மொத்தப் பணமும் குளோஸ்.. வங்கி மோசடி!

Mar 06, 2023,10:53 AM IST
மும்பை: மும்பையில் தனியார் வங்கியைச் சேர்ந்த 40 வாடிக்கையாளர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை மோசடிக் கும்பல் நூதன முறையில் அபகரித்த செயல் அதிர வைத்துள்ளது.



இந்த வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதில், உங்களது பான் விவரம், கேஒய்சி விவரத்தை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிந்த பல வாடிக்கையாளர்கள் அந்த லிங்க் பக்கமே போகவில்லை. ஆனால் 40 பேர் ஏமாந்து போய் அதை ஓபன் செய்து மாட்டிக் கொண்டனர்.

இந்த லிங்க்கை யாரெல்லாம் ஓபன் செய்தார்களோ அத்தனை பேரின் வங்கிக் கணக்கிலிருந்தும் லட்சக்கணக்கான பணம் கை மாறி விட்டது. இதை அதிர்ந்து அந்த 40 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற லிங்க்குகளை ஓபன் செய்வது கூடாது என்று போலீஸார் அடிக்கடி எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இந்த மோசடி வலையில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.



உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டது, உங்களது நெட்பேங் லாகின் முடக்கப்பட்டுள்ளது.. அதை ரிலீஸ் செய்ய  பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள் என்பது உள்பட விதம் விதமான முறையில் உங்களுக்கு லிங்க்குகளை மோசடியாளர்கள் அனுப்புவார்கள். அது எதையும் நீங்கள் ஓபன் செய்து விடக் கூடாது. மீறி செய்தால் மொத்தப் பணமும் காலிதான்.

மும்பை வங்கி மோசடியில் ஏமாந்த 40 பேரில் டிவி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவராம். அவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு வந்த இணைப்புக்குள் போய் கஸ்டமர் ஐடி, பாஸ்வேர்ட், ஓடிபி என எல்லாவற்றையும் கொடுத்த இவர் இப்போது, 57 ஆயிரத்து 638 ரூபாய் பணத்தை இழந்து விட்டு நிற்கிறார்.

உஷாரா இருங்க மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்