சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக 44 புறநகர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரயில் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை, ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}