- சொ.மங்களேஸ்வரி,
இன்றைய இயந்திரத் தொழிலுலகில் ஆரோக்கியத்தைப் பேணுவது சவாலான ஒன்றாக உள்ளது. ஆங்கில மருத்துவம் வருவதற்கு முன்னரே, நம் முன்னோர்கள் வீட்டு சமையலறையிலும், தோட்டத்திலும் இருந்த பொருட்களைக் கொண்டே உடல் நலத்தைக் காத்தனர்.
அப்படிப்பட்ட 50 அற்புதக் குறிப்புகளை இங்கு நாம் காண்போம்:
1. செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் நலிவினை போக்கும்.
2. நாவல் பழம் சாப்பிட்டு வர கல்லீரல் நோய் குணமாகும்.
பெண்களுக்கு கருப்பை நோய்களும் குணமாகும்.
3. அகத்திக்கீரை சாப்பிட பித்த கோளாறுகள் அகலும்.
4. கோவைப் பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி குணமாகும்.
5. தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும் .
6.மஞ்சள் ,அருகம்புல், சுண்ணாம்பு கலந்து பூச நகச்சுற்று தீரும்.
7. மணல் தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வாய்ப்புண் தீரும்.
8. முருங்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட கண் நோய் தீரும். இரும்புச் சத்து அதிகரிக்கும்.
9. புங்கப்பட்டையை கசாயம் ஆக்கி குடிக்க மூலம் குணமாகும்.

10. காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ சேற்றுப்புண் குணமாகும்.
11. வசம்பு தூளை காயத்தின் மீது தூவ, காயம் குணமாகும்.
12. ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ பரு குணமாகும்.
13. அன்னாச்சி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
14. அரளி பூவை தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும்.
15. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.
16. பிரண்டை துவையல் தொடர்ந்து சாப்பிட பசியைத் தூண்டும்.
17.இஞ்சி, மாதுளை பழச்சாறு, தேன் கலந்து குடிக்க இருமல் தீரும்.
18. நன்னாரி வேர் கசாயம் சாப்பிட தோல் நோய் நீங்கும்.
19. வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.
20.வெற்றிலையும் மிளகும் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும்.
21. பெருங்காயத்தை 20 மில்லி நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட்டு வர காது வலி தீரும்.
22. துத்தி இலை வேர் கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் தீரும்.
23. பூண்டு, வெற்றிலையை அரைத்து தேய்த்து குளிக்க தேமல் தீரும் .
24. மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட்டால் சரியாகும்.
25. சுரைக்காய் வாரம் இரு தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
26. தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண்ஒளி பெருகும்.
27. பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர பசி உண்டாகும்.
28.தினசரி பேரீச்சம் பழம் சாப்பிட எலும்பு வலுப்பெறும்.
29. கற்றாழை வைத்து கட்டினால் சிலந்தி கடி குணமாகும்.
30. தாமரைப்பூவை கசாயம் செய்து, வடிகட்டி காலை மாலை சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
31. வல்லாரைக் கீரை காசநோய், ஈளை முதலானவை அகற்றும். நினைவாற்றலை பெருக்கும்.
32. பல் வலி, ஈறு வீக்கம் உள்ளவர்கள் ஒரு துண்டு சுக்கை இடித்து வலியுள்ள இடத்தில் வைக்க வலி குறையும்.
33. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி தீரும்.
34. பீர்க்கங்காய் வேர் கசாயம் சாப்பிட ரத்த சோகை குணமாகும்.
35. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பப்பாளி பழங்களை அதிக அளவில் உண்பது நல்லது.
36. ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
37. ஆவாரம் பூவை காலை வேளையில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.
38.திருநீற்றுப்பச்சிலை முகர்வதால் தூக்கமின்மை தீரும்.
39.நெல்லிக்கனி ஈறுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.
40. சிறியாநங்கை சாப்பிட்டு வர நீரழிவு பாதிப்புகள் தடுக்கப்படும்.
41. அத்திப்பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
42. பனங்கற்கண்டு பசும்பால் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகும்.
43. இலந்தை பழத்தை சாப்பிட மூளை புத்துணர்ச்சி பெறும்.
44. கறிவேப்பிலை மஞ்சள் அரைத்து குளித்தால் முகப்பரு தழும்பு நீங்கும்.
45. பூவரசன் வேர் பட்டை கசாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
46. மகிழ இல்லை கசாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல் நோய் நீங்கும்.
47. புரையோடிய புண் காயம் ஆற அத்திப்பால் தடவி வர குணமாகும்.48. வில்வ பழம் சாப்பிட மூளை தொடர்பான பல நோய்கள் தீரும்.
49. நொச்சி இலை போட்டு நீராவி பிடிக்க கடும் காய்ச்சல் குணமாகும்.
50. வெண்பூசணி சாறு 100 மில்லி வீதம் தினமும் சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும்.
(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)
டெல்லி நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு!
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் விஜய் போட்டியிட போகும் அந்த 2 தொகுதிகள்
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பை கைவிட.. பாகிஸ்தான் முன்வைக்கும் 3 நிபந்தனைகள்!
அம்மா(ஆ)ச்சி
பல் வலியா ? பூச்சி பல்லா?.. எப்படிக் கண்டுபிடிக்கலாம்.. எப்படி சரி செய்யலாம்!
மகிழ்ச்சியைப் போல எந்த மருந்தும் இல்லை.. There is no medicine like happiness!
சுவையான கன்னியாகுமரி ஸ்டைல் சிக்கன் பிரியாணி!
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.. பழமொழியும் உண்மைப் பொருளும்!
{{comments.comment}}