- எஸ். சுமதி
பனிக்கால நோய்களுக்கு இயற்கை வைத்தியத்தில் ஏகப்பட்ட டிப்ஸ் இருக்குங்க.. உரிய முறையில் அவற்றை எடுத்துக் கொள்வது உங்களை சரி செய்யும், நிம்மதியாக உணர வைக்கும்.
குளிர் காலத்தில் ஏற்படும் பெரிய தொல்லை எது என்றால் அது சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்றவைதான். எப்பப் பார்த்தாலும் மூக்கடைத்துக் கொண்டு எரிச்லாக இருக்கும்.
இதுபோன்ற தொல்லைகளுக்கு இந்த இஞ்சி-திப்பிலி கஷாயம் ஒரு சிறந்த மருந்தாக அமையும். செய்வதும் சுலபம். சீக்கிரமே பலனும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்

இஞ்சி1
திப்பிலி 2
மிளகு 4
துளசி 5
தயாரிக்கும் முறை
இஞ்சி, திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை லேசாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தட்டிய பொருட்களுடன் துளசி இலைகளையும் சேர்க்கவும்.
நீர் நன்றாகக் கொதித்து சாறு இறங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
இந்த கஷாயத்தை வடிகட்டி, மிதமான சூட்டில் பருகவும். கஷாயம் காரமாக இருந்தால், குடிக்கும் போது சிறிதளவு தேன் கலந்து பருகலாம் (தேன் கலக்கும் முன் கஷாயம் மிதமான சூட்டில் இருப்பதை உறுதி செய்யவும்).
அதிகாலை அல்லது இரவு தூங்குவதற்கு முன் இதை குடிப்பது அதிக பலன் தரும். பனிக்காலத்தில் குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது குணமடைவதை விரைவுபடுத்தும்.
(About the Author.. Mrs. S. Sumathi, M.A.,B Ed., Graduate Teacher (English), Sri KGS HSS, Aduthurai, Thiruvidaimarudur tk, Thanjavur dt)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}