சென்னை : தமிழகத்தில் செயல்படும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை கொள்கை விளக்கு குறிப்பு பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.8,047.91 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 ல் ரூ.36,050.65 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23 ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ.44,098.56 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 சில்லறை மது விற்பனை கைடகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் அறிவிப்பு மட்டும் தானா? இல்ல நிஜமாவே மூடப் போறீங்களா அமைச்சரே என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது என்பதை அவரே புள்ளி விபரத்துடன் சொல்லி விட்டார். பிறகு எப்படி மூடுவார்கள். மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}