சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இதுவரை 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் மழை இப்போதே வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைதத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விட முதல்வர் மு.க.ஸ்டாலினே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விழுப்புரம், கடலூர் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அதற்குட்பட்ட காரைக்கால் மாவட்டம் ஆகியவற்றுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}