சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள நிலையில் கட்சியை கவனித்துக் கொள்ள எச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால அரசியல் படிப்புகளை மேற்கொள்ள கடந்த புதன்கிழமை லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாத இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.
இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவர் நியமனம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
கனகசபாபதி, பொருளாளர் சேகர், மாநில செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில். எச். ராஜா மட்டுமே மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}