பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

Oct 24, 2024,12:35 PM IST

பெங்களூரு: பெங்களூருவில் 63 அடி உயரம் கொண்ட ராம ஆஞ்சநேயர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ராமருடன் ஆஞ்சநேயர் சேர்ந்து இருக்கும் மிக உயரமான சிலை இது தான்.


பெங்களூருவின் ராஜாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம மந்திராவில் (ராமர் கோவில்) தான் இந்த பிரம்மாண்ட ராம ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராம மந்திரா ஆலயம் தக்ஷிண அயோத்தியா என அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீ ராம சேவா மண்டலி கமிட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டம் என்பதை தாண்டி, இன்றைய இளைஞர்களிடம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


ஆகஸ்ட் 23 ம் தேதியன்று மாலை 05.30 மணியளவில் பிரண பிரதிஷ்டை செய்து இச்சிலை திறக்கப்பட்டது. இதன் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளதாக இக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட சிலை திறப்பு விழாவில் கன்னட நடிகர்கள் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 




இந்த சிலை குறித்து ஸ்ரீ ராம சேவா மண்டலி அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், சுமார் ரூ.2 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 370 க்கும் அதிகமான மெட்ரிக் டன் ரெடி மிக்ஸ் கான்க்ரீட், 23.50 மெட்ரிக் டன் இரும்பு, 1246 மூட்டை சிமெண்ட், 13 லோடு மணல், 13 லோடு ஜல்லி, 7816 கிலோ கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

தர்மஸ்தாலாவை சேர்ந்த டாக்டர் வீரேந்திர ஹெக்டே இந்த சிலையை நிறுவ முடிவு செய்ததுடன் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளித்தார். இது தவிர 40க்கும் அதிகமான குடும்பத்தினர்கள் தலா ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்து தான் இந்த சிலை அமைக்கப்பட்டது.




சுமார் 40 ஸ்தபதிகள் சேர்ந்து ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றி தான் இந்த சிலையை உருவாக்கினார்கள். கான்க்ரீட்டை விட ஆயுள் குறைவு என்பதால் இந்த சிலையை உருவாக்க செங்கல் பயன்படுத்தவே இல்லை என்றார். இந்த சிலையை அமைத்த ஜீவன் கலா சன்னிதி அமைப்பை சேர்ந்த ஜீவன் கூறுகையில், இதற்கு முன் கேஜிஎஃப் 2 படத்திற்காக கன்னட நடிகர் யாஷின் சிலை, பல்லாரியின் புனித் ராஜ்குமாரின் சிலை போன்ற உயரமான சிலைகளை நான் செய்துள்ளேன் என்றார். கர்நாடகாவிலேயே மிக உயரமான சிலை, புனித் ராஜ்குமார் சிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்