இம்பால்: மணிப்பூரில் கலவரம், பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் 700 க்கும் அதிகமான மியான்மர் நாட்டினர், மணிப்பூருக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அளவுக்கு அதிக அளவிலான மியான்மர் நாட்டினர், எப்படி மணிப்பூருக்கு வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என தெரியவில்லை.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில் வன்முறை கும்பல் ஒன்று இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக இதுவரை 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7வது குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணிப்பூரில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால் அங்கு 60,000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் நாட்டை சேர்ந்த 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்ளிட்ட 700 க்கும் அதிகமானவர்கள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மணிப்பூருக்குள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்த இவர்கள் 7 மாவட்டங்களில் மியான்மர் எல்லையை ஒட்டிய கிராமங்களிலும் தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
மியான்மர் நாட்டினரை அழைத்துச் செல்லும் படி அசாம் பாதுகாப்பு படையை மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி இந்திய எல்லையை தாண்டி உள்ளே வந்தனர் என விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. மியான்மர் நாட்டினர் மணிப்பூருக்குள் வந்ததை மணிப்பூர் தலைமை செயலாளர் வினீத் ஜோஷியும் உறுதி செய்துள்ளார்.
இது போன்று பதற்றமான சூழலில் மியான்மர் நாட்டினர் மணிப்பூருக்குள் நுழைவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் பாதுகாப்பு படையினரை மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}