8 வயது சிறுமியை சீரழித்த.. 74 வயது ரிடையர்ட் எஸ்.ஐ... பெங்களூரில் அக்கிரமம்

Aug 15, 2023,04:00 PM IST
பெங்களூரு:  பெங்களூரைச் சேர்ந்த 74 வயதான ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு இந்த கொடூரம் நடந்தேறியுள்ளது. இன்று காலை அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். தன் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவரின் பெண்ணைத்தான் இந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று இரவு அந்த வீட்டில் வசித்து வரும் 8 வயது சிறுமி பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பொம்மை கீழே விழுந்து விட்டது. இதையடுத்து பொம்மையை எடுக்க சிறுமி கீழே போனார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வரவில்லை. 

இதனால் கவலை அடைந்த சிறுமியின் தாய் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் வீட்டிலிருந்து சிறுமி அழுதபடி வெளியே வந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் என்ன ஏது என்று விசாரித்துள்ளார். அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக சிறுமி அழுதபடி கூறியுள்ளார்.

சிறுமியின் உதடுகள் கடிக்கப்பட்டதால் வீங்கியிருந்தன. தனது வீட்டு படிக்கட்டில் வைத்து சிறுமியிடம் அக்கிரமம் செய்துள்ளார் அந்த நபர்.  இதையடுத்து சிறுமியின் தந்தை நியாயம் கேட்டு அந்த நபருடன் வாதத்தில் ஈடுபட்டார். ஆனால் காவல் அதிகாரியின் மகன் அவர்களை மிரட்டியுள்ளார். நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை காலி செய்து விட்டுப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் ரவுடிகளை வைத்து காலி செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அவரும் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இதற்கு அஞ்சாமல், போலீஸில் புகார் கொடுத்தார் சிறுமியின் தந்தை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியைக் கைது செய்தனர். குற்றத்தை மறைக்க முயன்றதாலும், சிறுமியின் தந்தையை மிரட்டியதற்காகவும், ஓய்வு பெற்ற அதிகாரியின் மகன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் குடும்பத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருக்க வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்