டெல்லி: 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. இதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும்.
இந்தத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பல்வேறு வசதிகள். அதன்படி, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பினால், வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். இவர்களுக்காக வாக்குச் சீட்டுகள் வீட்டுக்கே கொண்டு வந்து இவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}