பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணை நிரம்பப் போகிறது. இதனால் கர்நாடக காவிரி ஆறுகளில் விநாடிக்கு 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முதலில் கபிணி அணை நிரம்பியது. பிறகு நுகு அணை நிரம்பியது. தற்போது கே.ஆர்.எஸ். அணையும் விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தற்போது விநாடிக்கு 85,000 கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 50,000 கன அடி நீருக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் விரைவில் நீர் திறப்பு விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கேஆர்எஸ் அணைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது விநாடிக்கு 71,777 கன அடி என்ற அளவில் நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.91 அடியாக உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். கடந்த சில நாட்களாக தினசரி 8 முதல் 10 அடி வரை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விரைவில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}