வாவ்.. செம.. மலையாள ஹீரோக்கள் நடிப்பில் "காட்ஃபாதர்".. மிரள வைத்த "ஏஐ"!

Jun 28, 2023,11:41 AM IST
டெல்லி : 1972 ம் ஆண்டு ரிலீசான ஹாலிவுட் படம் தி காட்ஃபாதர். ஆஸ்கர் விருது வென்ற இந்த படம் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது. மார்லோன் பிராண்டோ, அல் பாசினோ, ஜேம்ஸ் கேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

கேங்ஸ்டர் பற்றிய கதை. தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்காக கொலை, அடிதடி போன்றவற்றில் ஈடுபடும் ஒரு கேங்ஸ்டர் எதிரிகளால் சூழ்ச்சி செய்து கொள்ளப்படுகிறார். அவருக்கு பிறகு அவரது மூத்த மகன் ரெளடி ஆகிறார். இது தான் தி காட்ஃபாதர் முதல் பாகத்தின் கதை. அதற்கு பிறகு பல பாகங்களாக இந்த கதை எடுக்கப்பட்டு வெளிவந்தது.



இந்த படத்தில் மைக்கேல் கர்லியோன், மோய் க்ரீனை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசுவார். அப்போது அவரின் தம்பி  ஃபிரிடோ கர்லியோனும் உடன் இருப்பார். இந்த சீன் மிகவும் புகழ்பெற்ற, ரசிகர்கள் பலரையும் கவர்ந்த சீனாகும். தற்போது இந்த சீனில் மலையாள டாப் ஹீரோக்களான மோகன்லால், மம்முட்டி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ளது போது ஏஐ எனப்படும் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ட் மூலம்  ரீகிரியேட் செய்துள்ளனர்.

அச்சு அசலாக நிஜமாகவே நடித்திருப்பது போல இந்த காட்சி அமைந்துள்ளது.  இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.  அதுவும் குறிப்பாக கேரள ரசிகர்களிடம் இந்த வீடியோ செம வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட சீன் போல் இல்லாமல் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் இளம் வயதில் இருந்த உருவத்தில் நடித்தது போல் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதற்காக ஏஐ.,க்கு ரசிகர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டு சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் ஏகப்பட்ட மாஜிக்குகளைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்