ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாகும் நிலையில்.. அதிமுக.. ஆனாலும் "ஹேப்பி"தான்!!

Jul 06, 2023,02:57 PM IST
சென்னை: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓ. பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை 
ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பியையும் அது இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேனி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பி. ரவீந்திரநாத்.  இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். ஓபிஎஸ் போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற அத்தனை பேரும் தோல்வி அடைந்தனர்.



தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் என பல தலைவர்கள் இக்கூட்டணியில் போட்டியிட்டாலும் அவர்கள் எல்லாம் தோற்றுப் போக ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றது அதிமுகவுக்குள் சலசலப்பையும், முனுமுனுப்பையும் ஏற்படுத்தியது. மேலும் ஓ.பி. ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்கவும் ஓபிஎஸ் முயன்று வந்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட சலசலப்புகள்தான் பின்னாளில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பிஎஸ்ஸுக்கும் பிரச்சினைகள் உருவானது. எடப்பாடி தரப்பின் கடும் ஆட்சேபனை காரணமாகவே ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது பாஜக.

இந்த நிலையில்தான் வழக்கறிஞர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது ரவீந்திரநாத்தின் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஒரு வகையில் சந்தோஷமான செய்திதான். என்னதான் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவர் எடப்பாடி தரப்புக்காக டெல்லியில் எதையும் செய்ததில்லை. மாறாக ஒரு பாஜக எம்பி போலத்தான் நடந்து கொண்டு வந்தார். தேனி தொகுதிக்காகவும் கூட அவர் எதுவும் செய்ததாக தெரியவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு கடுப்புடன்தான் இருந்து வந்தது. தற்போது அவர்கள் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

அதேசமயம், ஓ.பிஸ் தரப்புக்கு  இது மிகப் பெரிய அடியாகும். அடுத்தடுத்து அவர் சரிவுகளையே சந்தித்து வருகிறார். முதலில் முதல்வர் பதவியை பறி கொடுத்தார். சமீபத்தில் கட்சியையும் பறி கொடுத்தார். இந்த நிலையில் தனது மகனின் எம்.பி பதவி பறி போவதையும் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஓபிஎஸ்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகிழ்ச்சி

இந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேனி தொகுதியில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்தான் இளங்கோவன். மறுபக்கம் அமமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்த இருவருமே தோல்வியடைந்தனர்.

தீர்ப்பு குறித்து இளங்கோவன் கூறுகையில், தாமதானாலும் நீதி வென்றுள்ளது. வாக்கு பெட்டிகளை மாற்றியது, பணம் கொடுத்தது என பல்வேறு முறைகேடுகளைச் செய்துதான் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக அப்போதே நாங்கள் பல்வேறு புகார்களைக் கொடுத்தோம். இப்போது நீதி வென்றுள்ளது.  ஜனநாயகத்தை மதிப்பவராக இருந்தால் அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் இளங்கோவன்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்