டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசிய கட்சி அதாவது வங்கதேச ஜாதிய கட்சி என்ற கட்சிக்கு ஒரு இடத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்தக் கட்சியை அங்கு பிஜேபி என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி என்றதும் நம்ம நாட்டு கட்சியா என்ற ஆச்சரியமே பலருக்கும் எழும். ஆனால் நம்ம பாஜகவுக்கும், இந்த வங்கதேச பிஜேபிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
போலா-1 என்ற தொகுதியில் போட்டியிட்ட வங்கதேச தேசிய கட்சியின் தலைவர் அந்தலீவ் ரஹ்மான் பார்தோ சுமார் 1,05,543 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜமாத்-இ-இஸ்லாமி வேட்பாளர் சுமார் 75,337 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

வங்கதேச பிஜேபி கட்சியானது, அந்த நாட்டில் தேசிய அளவிலான ஒரு கட்சி கிடையாது. மாறாக மாநில அளவிலான கட்சிதான்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இத்தேர்தலில், 59 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுன.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}