சென்னை : முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி, தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் இணைந்து வரும் நாள் அமாவாசையாகும். மாதம்தோறும் வரும் அமாவாசைகளின் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
ஆடி அமாவாசை என்பது பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்களை நமக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக புறப்படும் நாளாகும். இந்த நாளில் அவர்களை நினைத்து கொடுக்கப்படும் தர்ப்பணம் பித்ருலோகத்தில் அவர்கள் துன்பப்படாமல் நற்கதி அடைய செய்வதுடன், அதன் பலன் நம்முடைய பிள்ளைகளை போய் சேரும். நாம் கொடுக்கும் தர்ப்பணம் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம், நாம் செய்த பாவங்களை போக்கு வீட்டில் உள்ள துன்பங்களை போக்கக் கூடியதாகும்.
2023 ம் ஆண்டில் மிகவும் விசேஷமாக ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. அதாவது ஆடி முதல் நாளான ஜூலை 17 ம் தேதியும், ஆடி 31 ம் தேதியான ஆகஸ்ட் 16 ம் தேதியும் அமாவாசை திதி வருகிறது. இந்த இரண்டு நாட்களுமே முன்னோர்களை வழிபட்டு திதி கொடுக்க ஏற்ற நாளாகும்.
ஆடி அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளில் நீராடி, பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்கள் முழுவதுமாக உபவாசம் இருக்க வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து அவர்களுக்கு படைத்த பிறகு, காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, நாம் உணவு உண்ண வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று நம்முடைய முன்னோர்களை நினைத்து நெய் தீபம் ஏற்றுவது சிறப்பானதாகும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைக்கலாம். அதுவும் முடியாதவர்கள் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கலாம். யாராவது இரண்டு பேருக்கானது அன்னதானம் வழங்குவது சிறப்பானது.
அம்மா அல்லது அப்பா அல்லது இருவரும் இல்லாத ஆண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த கணவன் அமாவாசை விரதம் இருக்கலாம். சுமங்கலி பெண்கள் அமாவாசை விரதம் இருக்கவோ, தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது. இறந்த தனது பெற்றோர்களை நினைத்து வழிபட்டு, யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்கலாமே தவிர முறையாக அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}