Instagram: "ஹலோ நண்பா, நண்பீஸ்".. ஒத்த படம்.. 4 மில்லியன் பாலோயர்ஸ்.. அலற விட்ட விஜய்!

Apr 03, 2023,09:51 AM IST
சென்னை : தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். இவருக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளன. விஜய் பற்றி எந்த தகவல் வெளி வந்தாலும் அதை அவரது ரசிகர்கள் உடனே டிரெண்டாக்கி விடுவார்கள்.

தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. லியோ பற்றிய ஒவ்வொரு தகவலும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கிடையில் சென்னை வந்த விஜய், அஜித்தின் தந்தை மறைவிற்காக அஜித் வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறியது, குட்டி குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியது என வரிசையாக அனைத்தும் டிரெண்டாகி வருகிறது.



விஜய், சோஷியல் மீடியாவில் கணக்கு வைத்துள்ளாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது பெயரிலும், அவரது மகன் சஞ்சய் பெயரிலும் ட்விட்டரில் பல கணக்குகள் இயங்கி வருகின்றன. வழக்கமாக இன்ஸ்டாகிராமில் விஜய் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோக்கள் விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை தான் வெளியாகி லைக்குகளை அள்ளும். இந்நிலையில் தற்போது, "ஹாலோ நண்பா, நண்பீஸ்" என ஒரு பதிவு தீயாய் பரவி வருகிறது.

இந்த பதிவை போஸ்ட் செய்தது வேறு யாரும் அல்ல. நடிகர் விஜய் தான். இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள விஜய், தனது முதல் பதிவாக லியோ பட ஸ்டில்லை பதிவிட்டு, இந்த கேப்ஷனை பதிவிட்டுள்ளார். விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த விஷயம் சோஷியல் மீடியாவில் பரவியதும் அனைவரும் அவரை ஃபாலோ பண்ண துவங்கி விட்டனர். கணக்கு துவங்கி 12 மணி நேரத்திற்குள் விஜய்க்கு 3 மில்லியன் ஃபாலோவர்கள். விஜய்யின் முதல் போஸ்டிற்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்துள்ளது.

இதற்கிடையில் விஜய்யின் இன்ஸ்டா வருகையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள், விஜய் நடித்த கத்தி படத்தில் வரும் செல்ஃபிபுள்ள பாடலை வைரலாக்கி வருகின்றனர். இந்த பாடலில் வரும், "இன்ஸ்டா கிராமத்திலே வாடி வாழலாம்...நாம வாழும் வாழ்க்கையெல்லாம் சுட்டு தள்ளலாம்" என்ற வரிகள் செம டிரெண்டாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்