"தண்ணியடி, பெண்ணே".. கஸ்தூரி போட்டசர்ச்சை டிவீட்.. தாறுமாறாக வெடித்த விவாதம்!

Jul 14, 2023,09:49 AM IST
சென்னை:  பெண்கள் சிலர் டாஸ்மாக் மதுக் கடையில் மது வாங்குவது தொடர்பான  வீடியோவைப் பகிர்ந்து கமெண்ட் போட்ட நடிகை கஸ்தூரிக்கு எதிராக அவரது டிவிட்டர் பக்கத்தில் காரசாரமான விவாதங்கள் தகித்துக் கொண்டுள்ளன.

பொது விவகாரங்கள் தொடர்பாக ஏதாவது கமெண்ட் போட்டு டிவிட்டரில் களமாடுபவர். அவற்றில் பல வரவேற்பைப் பெறும். பல எதிர்ப்புகளை வாரிக் கொண்டு வரும். எல்லாவற்றையும் ஒரே மன நிலையில் ஏற்பார் கஸ்தூரி. விடாமல் தனது கருத்துக்களைப் பகிர்வதில் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை.

இந்த நிலையில் கஸ்தூரி போட்ட ஒரு டிவீட்டால் டிவிட்டர் தளமே பரபரப்பாகியுள்ளது. கஸ்தூரியே இப்படிப் போடலாமா.. இது சரியா நியாயமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். அப்படி என்னதான் போட்டார் கஸ்தூரி.. இதுதான் அவர் போட்ட டிவீட்..



"தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! 
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.

WhatsApp fwd of the day. As received. 
Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 
#dravidamodel

இதுதான் அவர் போட்ட டிவீட். இந்த டிவீட்டில் பெண்கள் இருவர் டாஸ்மாக் மதுக் கடையில் மது வாங்குவது போல உள்ளது.  அந்த வீடியோவைத்தான் இந்த டிவீட்டில் பகிர்ந்துள்ளார் கஸ்தூரி.

இந்த டிவீட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு கஸ்தூரி பதிலும் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவரும், பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் ஹேன்டிலை ஒரு நாள் இயக்கிய பெருமையும் கொண்ட ஸ்நேகா மோகன்தாஸ் போட்டுள்ள டிவீட்டில் கஸ்தூரி குறித்து வந்த ஒரு செய்தியைப் போட்டு, இந்த பாரில் உங்களைப் போல தண்ணியடி ஓகேவா.. யார் குடித்தாலும் அது தவறுதான்.. குடிப்பவர்களை நான் ஆதரிக்கவே மாட்டேன். ஆனால் உங்களிடமிருந்து இப்படி ஒரு டிவீட் வந்தது அறுவறுப்பாக இருக்கிறது.  அவங்க இஷ்டம், அவங்க பணம், அவங்க வாழ்க்கை.. உங்களுக்கென்ன அதைப் பற்றிக் கவலை.. என்று காட்டமாக கேட்டிருந்தார்.



இதற்கு உடனடியாக கஸ்தூரி பதிலளித்துள்ளார்.  நான் பார்களிலும் பப்களிலும் குடிப்பதாக நீங்க சொல்லிருக்கீங்க. உங்க மேல சட்ட நடவடிக்கை எடுக்க எனக்கு உரிமை உண்டு. தனிப்பட்ட முறையில், யார் வேண்டுமானாலும் தங்களது வாழ்க்கையை சீரழிச்சிக்க உரிமை உண்டுன்னு நீங்க வாதிடலாம். உங்களோட சமூக அக்கறை உங்களைப் பற்றியும், நீங்க சார்ந்த உங்க கட்சியையும் தோலுரித்துக் காட்டுகிறது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் ஸ்நேகா விடவில்லை.. அடுத்து அவர் போட்ட பதிலில்,  என்ன ஒரு ஜோக்.. அக்கா உங்க மேலதான் முதல் சார்ஜ்ஷீட் போடுவாங்க.. அனுமதி இல்லாமல் சாமானிய பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது போல வீடியோ போட்டதுக்கு.  பள்ளிகள், கோவில்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி எத்தனை போராட்டம் நடத்திருக்கீங்க நீங்க.. சொல்லுங்க பார்ப்போம். நீங்க வந்து என்னோட சமூக அக்கறை பத்தியும் என்னோட கட்சி பத்தியும் பேசறீங்க.



ஒரு தனி நபர் குறித்த செய்தியை சமூக வலைதளங்களில் அவங்களோட அனுமதி இல்லாமல் போடுவதோ அல்லது பார்வர்ட் செய்வதோ சட்டப்படி குற்றம். ஜெயிலுக்குப் போவீங்க நீங்க. இந்த விதி உங்களுக்கும் கூட பொருந்தும். நல்ல லாயர் வேணும்னா சொல்லுங்க. நான் பரிந்துரை பண்றேன் என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிறார்களாக இருந்தாலும் சரி.. குடிப் பழக்கம் மிகக் கொடுமையானது.. சமூக அவலம்.. அதை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரலில்அனைவரும் இணைந்து முழங்க வேண்டிய நேரம் இது.. குறிப்பாக பிரபலங்கள்..  அதைத் தவிர்த்து வேறு எந்த வகையான வாதமும்,விவாதமும் இந்த சமூகத்துக்கும், மக்களுக்கும் அனாவசியமானதே.

சமீபத்திய செய்திகள்

news

இப்பூலோகமே கொண்டாடும் பெண்மை வாழ்க!

news

கள்ளமில்லா புன்னகையால் .. கவர்ந்து இழுக்கும் காந்த புயல்கள்

news

நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!

news

வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!

news

கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்