குஷ்பு இப்போ எப்படி இருக்கார்?... அவரே வெளியிட்ட "பிரிஸ்க்" அப்டேட்!

Apr 11, 2023,11:11 AM IST
சென்னை : தனது உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்டை நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பு சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிக காய்ச்சல் காரணமாக நடிகை குஷ்பு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடைசியாக பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அதிகப்படியான உடல் வலி மற்றும் உடல் பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதவனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.  



இதற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன குஷ்பு இன்ஸ்டாகிராமில் தனது உடல்நிலை குறித்து போஸ்ட் போட்டிருந்தார். அதில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டேன். சிறிது காலம் முழுமையான ஓய்வில் இருக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு வாரம் பயணம் செய்வதை முழுவதுமாக தவிர்த்து வேண்டும் என தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் அனுமதி அளித்த பிறகு அலுவலகத்திற்கு சென்று, பணியை தொடர முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்குள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவித்த குஷ்பு, மாஸ்க் அணிந்த தனது பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து, தான் விரைவில் குணமடைந்து வருவதாக மற்றொரு ஹெல்த் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் குஷ்பு. 

நடிப்பு, அரசியல் என இரண்டிலும் படுபிஸியாக இருந்து வரும் குஷ்பு, பாஜக.,வில் இணைந்த பிறகு செம பிஸியாகி விட்டார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றாலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது. குஷ்பு கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். டிவி ஷோக்கள் சிலவற்றிலும் குஷ்பு பங்கேற்று வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்