நாளை வெளியிட போவது திமுக சொத்து பட்டியலா? கோப்பு பட்டியலா?...ட்விட்டரை அலற விட்ட அண்ணாமலை

Apr 13, 2023,12:15 PM IST
சென்னை : ஏப்ரல் 14 ம் தேதி காலை 10.15 மணிக்கு திமுக.,வின் கோப்புக்கள் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். ட்விட்டரில் டிரெண்டான இந்த ட்வீட், தற்போது விவாதத்திற்குரிய விஷயமாகவும் மாறி உள்ளது.

சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, ஏப்ரல் 14 ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களின் சொத்து விபரங்களை வெளியிட போவதாக பேசி இருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி செய்தியாளர்கள் பல முறை கேட்ட போதும், "ஏப்ரல் 14 ம் தேதி சொன்னபடி செய்வேன். அன்று ஒரு நிகழ்ச்சி நடக்க போகிறது. அதில் திமுக.,வினரின் ஊழல் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் வெளிவரும்" என்றார்.



இந்நிலையில் இன்று ட்விட்டரில், #DMKFiles என்ற தலைப்பில் கருணாநிதி துவங்கி, திமுக குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அண்ணாமலை இந்த ட்வீட் போட்ட சில நிமிடங்களில் #DMKFiles என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.  திமுக உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட சிலர், திமுக அமைச்சர்களின் சொத்து ஊழல் பட்டியல் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் தற்போது திமுக பதவியோ, எல்எல்ஏயோ, அமைச்சரோ கூட இல்லாத குடும்பத்தை குறிவைத்து திமுக கோப்புகளாக மாறியுள்ளது. இது ரொம்ப பழைய கோப்புகளா? அரசியலில் இல்லாத அண்ணாமலையின் குடும்ப உறவினரை திமுக குறிவைத்தால்...என கேட்டு ட்வீட் போட்டுள்ளனர். 

இருந்தாலும் நாளை 10.15 மணிக்கு அண்ணாமலை, திமுக பற்றிய என்ன விபரத்தை வெளியிட போகிறார் என தெரிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழகமே காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் ட்வீட்டிற்கு அதிமுக.,வினர் பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை வெளியிடும் கோப்புக்களால் தமிழக அரசியலில் மாற்றம் வருமா என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

தோளோடு தோள் சேர்ந்து நடப்போம்.. Balancing Relationship Is An Art

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்