தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்...இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி

Jun 15, 2023,03:02 PM IST

சென்னை : ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் கவனித்து வந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, மற்ற அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமியிடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த இலாக்கா மாற்றம் தொடர்பான அரசு உத்தரவு கவர்னரின் ஒப்புதலுக்காக அவரிடம் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இந்த இலாகா மாற்றத்தால் சோஷியல் மீடியாவில் #MinisterSenthilBalaji  #Cabinetreshuffle போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்