வந்தே பாரத்திற்கே வாயை பிளந்தா எப்படி? .. "வந்தே மெட்ரோ"வை களமிறக்கும் மோடி!

Jul 15, 2023,09:53 AM IST
டெல்லி : வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மக்களிடையே பிரபலமாகியுள்ள நிலையில் அடுத்து வந்தே மெட்ரோ சேவையை தொடங்கப் போகிறது இந்திய ரயில்வே.

இந்திய ரயில்வே துறை சமீபத்தில் நாட்டில் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் வந்தே பாரத் என்ற அதிவேக விரைவு சொகுசு விரைவு ரயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி அடைந்ததை அடுத்து, அடுத்ததாக வந்தே மெட்ரோ என்ற திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வந்தே மெட்ரோ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.



வந்தே மெட்ரோ மூலம் சிறிய நகரங்களுக்கு மிக விரைவாக பயணம் செய்ய முடியும். 100 முதல் 150 கி.மீ., தொலைவிலான நகரங்களை இணைப்பதே வந்தே பாரத்  மெட்ரோ திட்டத்தின் நோக்கமாகும். இந்த ரயில் மணிக்கு 60 கி.மீ., செல்லக் கூடியதாகும். இதனால் பயணிகள் தான் சென்று சேர வேண்டிய இடத்திற்கு 2 முதல் 2.30 மணி நேரத்திற்குள் சென்று விட முடி��ும்.

அது மட்டுமல்ல வந்தே பாரத் மெட்ரோ ரயிலில் பயணிகளை கவர பல சிறப்பு அம்சங்களும் உள்ளதாம். த��னியங்கி கதவுகள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாதனங்கள் உள்ளன. இது முழுக்க முழுக்க ஏசி வசதி செய்யப்பட்டது. ஏறக்குறைய 300 பயணிகள் சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நின்று கொண்டும் பயணம் செய்யலாம். மொத்தமாக 700 - 800 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும்.

வந்தே பாரத் ரயிலில் இருப்பது போது அவசர கால உதவி , தீ கண்டறியும் அலாரம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன. இது குறுகிய தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டர்சிட்டி ரயில் கட்டணத்திலேயே வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கபப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த வந்தே பாரத் மெட்ரோ திட்டத்தை வடிவமைத்தது சென்னையை சேர்ந்த இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி தான். நாடு முழுவதும், குறைந்த நேரத்தில் அதிக தூரம் செல்லும் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்