புதிய பிசினஸ் துவங்கும் அஜித்.. அப்ப விடாமுயற்சி ஷூட்டிங் எப்போ?

May 24, 2023,09:54 AM IST
சென்னை : நடிகர் அஜித், தான் புதிய பிசினஸ் ஒன்றை துவங்க போவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக கேட்டு வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்ற லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு தான் புதிய பிசினஸ் ஒன்றை துவங்க உள்ளதாக அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அஜித். ஏகே மோட்டோ ரைட் என்ற பெயரில் அதிக தூரம் மோட்டர் பைக்கில் செல்வது எப்படி என்ற வழிகாட்டுவதலை வழங்கி, இந்தியா மற்றும் உலகம் முழுவதையும் பைக்கிலேயே சுற்றி வரும் டூர் ஏற்படும் செய்து தரும் பிசினசை தான் பைக் பிரியர்களுக்காக அஜித் துவங்க போகிறார். 



இதை கொண்டாடிய ரசிகர்கள் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை அஜித் எப்போது துவக்க போகிறார் என்பதையும் ஆர்வமாக கேட்டு வந்தனர். அஜித்தின் அடுத்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் சமீபத்தில் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, விடாமுயற்சி படத்திற்கான டெஸ்ட் போட்டோஷூட்டை அஜித் ஏற்கனவே துவங்கி விட்டாராம். இந்த படத்திற்காக அவர் புதிய லுக்கிற்கும் மாற போகிறாராம். 

சமீபத்தில் லைகா நிறுவன அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தள்ளி போக உள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால் அவை உண்மை இல்லையாம். லேட்டஸ்ட தகவலின் படி ஜூன் 2வது வாரத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக படக்குழு உறுதி செய்து விட்டதாம்.

அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேசப்பட்டு விட்டதாம். ஏறக்குறைய பேச்சுவார்த்தை முடிவாகி விட்டதால் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாம். பெரிய நட்சத்திரங்கள் பலரையும் இந்த படத்தில் நடிக்க வைக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின் போது விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பைக்கிலேயே ஏழு கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் வேர்ல்டு டூரை துவக்க உள்ளதாக அறிவித்து விட்டார் அஜித். கிட்டதட்ட 18 மாதங்கள் அஜித் பைக் டூர் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் நவம்பர் மாதத்திற்கு முன்பாக விடாமுயற்சி ஷூட்டிங்கை முடித்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்