சென்னை: மிச்சாங் புயல் கோர தாண்டவமாடி வருவதால், சென்னை கடற்கரை டூ தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்களை இயக்க முடியாத அளவுக்கு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது, பலத்த காற்று, தீவிர கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்சார ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.
சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி கோர தாண்டவமாடி வருகிறது மிச்சாம் புயல். புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் நேற்று மாலையில் இருந்து சென்னை நகரமும், புறநகர்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தொடர் கனமழையால் சென்னை முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சென்னை புறநகரில் இயங்கி வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி வழித்தடத்தில் வெள்ள நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்படும் சேதாரங்களை வைத்து தான் ரயில் இயக்கம் பற்றி அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கனமழையால் ரயில் வழித்தடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை, மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர், ஈக்காட்டு தாக்கல், அசோக் நகர், அருகம்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, மாம்பழம், பெரம்பூர் அண்ணா நகர், ஆலந்தூர், ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை, இடி மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}