"பாஸுக்கு கல்யாணம்".. காதலியை கைப்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்!

May 23, 2023,02:44 PM IST
வாஷிங்டன்:  அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது காதலி லாரன் சான்செஸை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இருவருக்கும் இடையே தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

லாரன் சான்செஸ் ஒரு ரேடியோ ஜர்னலிஸ்ட் ஆவார். கடந்த 2018ம் ஆண்டு முதல் லாரனும், பெஸோஸும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாகவே உலா வருகின்றனர். தற்போது இருவரும் ஜோடியாக பிரான்ஸ் வந்துள்ளார். அங்கு கான்ஸ் திரைப்பட விழாவில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.




இந்த நிலையில் இருவரது நீண்ட நாள் காதல் இப்போது திருமணத்தில் முடியப் போகிறது. முதல் கட்டமாக இருவரும் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர். சான்செஸ் தனது விரலில் மிகப் பெரிய இதய வடிவ மோதிரத்தை அணிந்துள்ளார்.

ஜெப் பெஸோஸ் ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவி பெயர் மெக்கென்சி ஸ்காட். இருவரும் 25 வருட கால திருமண பந்தத்தை சமீபத்தில்தான் முடித்துக் கொண்டனர். இந்த நிலையில்  தனது காதலியை மணக்கவுள்ளார் பெஸோஸ்.

பெஸோஸ் தனது மனைவி மெக்கென்சிக்கு கொடுத்த விவாகரத்து செட்டில்மென்ட் தொகையின் மதிப்பு 38 பில்லியன் டாலராகும். இதனால் மெக்கென்சி உலகின் 3வது பணக்கார பெண்மணியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்