பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா.. அன்பில் மகேஷ் பதில்.. "வாய்ப்பில்லை ராஜா"!

May 22, 2023,02:13 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். பிளஸ்டூ, பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளும்வெளியாகி விட்டன. 11ம்  வகுப்பு தேர்வு முடிவுகளும் கூட வெளியாகி விட்டன. நீட் தேர்வும் கூட நடந்து முடிந்து விட்டது. பிளஸ்டூ முடித்தவர்களுக்கு அடுத்து என்ஜீனியரிங் கவுன்சிலிங்கும் தொடங்கப் போகிறது.



ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளனர்.

ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மக��ஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை. 1ம்  வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார் அன்பில் மகேஷ்.

பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி இருக்கும் என்று எதிர்பார்த்த பெற்றோர்கள் தற்போது தங்களது பிள்ளைகளுக்கான சீருடை வாங்குவது, ஷூ, பேக் டிபன் பாக்ஸ், ஸ்னாக்ஸ் பாக்ஸ் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்