திரிஷா மாதிரி.. எப்போதும் யூத் லுக்குடன் இருக்கணுமா.. இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!

Feb 20, 2023,03:09 PM IST
சென்னை : எப்போதும் இளமையாக, யூத் லுக்குடன், அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது. ஆனால் அப்படி எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என பலருக்கும் தெரியாது. அழகு சாதன பொருட்கள் வாங்கி பணத்தை வீணடிக்காமல், எளிமையான உணவு, சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே எப்போதும் நாம் இளமை தோற்றத்துடன் இருக்கலாம். எப்படி எந்தெந்த பழங்கள், காய்கறிகளை நமது இளமையை தக்க வைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.



திராட்சை :

திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்கள் தோல்களில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, தோலை சுருங்க விடாது. இதனால் எத்தனை வயதானாலும் தோல் சுருக்கமோ, முதுமை தோற்றமோ எளிதில் வராது.

தக்காளி :

தக்காளியில் ஆன்டிஆக்சிடன்கள் எக்கசக்கமாக உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபின் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். இறந்த செல்களை முகத்தில் தேங்க விடாது. இதனால் இளமையுடனேயே காட்சி தருவீர்கள்.

முட்டைக்கோஸ் :

முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, டி மற்றும் இன்டோல் 2 கார்போனைல் உள்ளது. இவைகள் வயதாவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே போல் முட்டைக்காசில் நீர் சத்தும், நார்சத்தும் உள்ளதால் விரைவில் முதுமை தோற்றத்தை அடைவதை தடுக்கிறது.

ப்ளூ பெரிஸ் :

ப்ளூபெரிக்கள் ஆன்டி ஆக்சிடென்கள் அதிக நிறைந்தவை இவை இளமை தோற்றத்தை தக்க வைப்பதுடன், முதுமை ஏற்படுவதையும் தள்ளிப் போடுகிறது.

மீன் :

மீன், முட்டை, பூண்டு, சிட்ரஸ் பழங்கள் போன்ற கொலோஜன் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை நமது அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் தோலில் உள்ள எலாஸ்டிக் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதனால் தோல் சுருக்கம் ஏற்படுவதில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்