விஜய் இல்லைன்னா என்ன.. அட்லீயை வைத்து வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் "சன்"!

May 27, 2023,03:53 PM IST
சென்னை : அட்லீயை வைத்து  சன் பிக்சர்ஸ் செம பிளான் போட்டு வருகிறதாம்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான டைரக்டர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி உள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 07 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. 



இந்நிலையில் அட்லீ பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விஜய்யை வைத்து பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய அட்லீ தான் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவதற்கு பேசப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக பேசப்பட்டு, முதல்கட்ட பேச்சுவாரத்தைகள் முடிந்து அட்லீக்கு அட்வான்ஸ் பேமன்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தை முடித்த உடன் தளபதி 68 பட வேலைகளை அட்லீ துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

தளபதி 68 திடீரென கைமாறியதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் கோலிவுட்டின் நம்பத் தகுந்த சில வட்டாரங்கள் அளித்த தகவலின் படி, விஜய் - அட்லீ இணையும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். அநேகமாக தளபதி 69 அல்லது தளபதி 70 படத்தை அட்லீ இயக்கலாம் என சொல்லப்படுகிறது. லியோ படத்தை முடித்து விட்டு, வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் பிசியாகி விடுவார் என்பதால் விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் திட்டத்தை சன் பிக்சர்ஸ்  மாற்றிக் கொண்டுள்ளதாம்.

சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்ததை போல் அட்லீ தான் இயக்க போகிறாராம். ஆனால் ஹீரோ விஜய் கிடையாதாம். கன்னட சூப்பர் ஹீரோ யாஷ் அல்லது தெலுங்கு சூப்பர் ஹீரோ அல்லு அர்ஜூனை ஹீரோவாக நடிக்க வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். 

இந்த இருவரிடமும் தற்போது பேசப்பட்டு வருவதால் சன் பிக்சர்ஸ் - அட்லீ இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்