பொங்கி எழுந்த வாக்னர் குழு.. அதிர்ந்த புடின்.. ஓடி வந்து கூல் செய்த பெலாரஸ்!

Jun 25, 2023,10:29 AM IST
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய தனியார் படைக் குழுவான வாக்னர் தற்போது போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதால் அதிபர் புடின் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் பெலாரஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ராணுவத்தின் பல்வேறு வெற்றிகளுக்கு முக்கியக்  காரணம் வாக்னர் குழுதான். இது ஒரு ராணுவம் போன்ற படைக் குழு. யெவஜெனி பிரிகோஸின் என்பவரது தலைமையில் இது இயங்கி வருகிறது. ஈவு இரக்கமே இல்லாத படைக்குழு. இந்தக் குழுவை வைத்துக் கொண்டுதான் உக்ரைனின் பல பகுதிகளைப் பிடித்தது ரஷ்ய ராணுவம்.

இந்தக் குழுவின் ஆதிக்கம் ரஷ்ய ராணுவத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருந்ததால், ரஷ்ய ராணுவத் தளபதிகள் பலருக்கும் வாக்னரைப் பிடிக்காது. குறிப்பாக அதன் தலைவர் யெவஜெனி மீது கடும் கோபமும் உண்டு. இந்த நிலையில்தான் யெவெஜெனிக்கும், ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்கும் இடையே திடீரென முட்டிக் கொண்டது.




கடுப்பான யெவெஜனி தனது வீரர்களை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குவித்தார். இதேபோல ரோஸ்டோவ் உள்ளிட்ட நகர்களிலும் வாக்னர் படைகள் குவிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாஸ்கோவைக் கைப்பற்ற வாக்னர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதால் பெரும் மோதல் ஏர்படும் சூழல் உருவானது. 

தங்களை கூலிப்படை போலவும், சட்டவிரோத காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதாகவும் யெவெஜெனி குற்றம் சாட்டினார். இனி தாங்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட மாட்டோம் என்றும் அவர் அறிவித்தார். இதனால் ரஷ்ய ராணுவமும், அதிபர் புடினும் அதிர்ச்சி அடைந்தனர். வாக்னர் குழு முடிவால் பெரும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்பதால் புடின் பீதியடைந்தார்.

மேலும்  கஷ்டப்பட்டு பிடித்த பல்வேறு நகரங்களையும், பகுதிகளையும் உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விடும் என்ற சூழல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பையும் அழைத்தது. வாக்னர் குழுவை அது அவசரமாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகசென்கோவே நேரடியாக வாக்னர் குழுத் தலைவர் யெவெஜெனியுடன் பேச்சு நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ரஷ்யாவில் யெவெஜெனி மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கு கை விடப்படும். போரிலிருந்து விலகும் வாக்னர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். வாக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பினால் அனுமதிக்கப்படுவார்கள் என்று உடன்பாடு ஏற்பட்டது.




உள்நாட்டுப் போரைத் தவிர்க்கவும், ரத்தக்களறி ஏற்படாமல் தடுக்கவும், இந்த பேச்சுவார்த்தை அவசியமாக இருந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சி தருகிறது. நாங்கள் எப்போதுமே வாக்னர் வீரர்களை மதிக்கிறோம். அவர்களது தீரம் மிகவும் உயரியது என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்த சமரச உடன்படிக்கையால் வாக்னர் குழு- ரஷ்ய ராணுவத்துக்கு இடையிலான மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம், உக்ரைனுக்கு எதிரான போரில்  வாக்னர் குழு இனி எப்படி செயல்படப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

50,000 வீரர்கள்

வாக்னர் குழு ஒரு குட்டி ராணுவம் ஆகும். ராணுவத்தில் உள்ளது போலவே இங்கும் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் உள்ளனர். அதி நவீன ஆயுதங்களைக் கையாளுவதில் இவர்கள் கில்லாடிகள். இந்தக் குழுவினர் லிபியா, சிரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள்.




ரஷ்ய ராணுவம் கிரீமியாவைப் பிடிக்க வாக்னர் குழுதான் முக்கியக் காரணம். இதேபோல ரோஸ்டோவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றவும் வாக்னர்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

2014ம் ஆண்டு முதல் இந்த வாக்னர் குழு செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரே யெவெஜெனிதான். அசைக்க முடியாத ஒரு படைக்குழுத் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார். இவர் இல்லாவிட்டால் உக்ரைன் போரில் இந்த அளவுக்கு ரஷ்யா தாக்குப் பிடித்திருக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்