"வேகத்தை விட விவேகம் (படத்தை சொல்லலை)".. என்னா குசும்பு ப்ளூ சட்டை மாறனுக்கு!

Jul 12, 2023,03:36 PM IST
சென்னை: "ஆனாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாதுண்ணே" என்று வடிவேலு மாதிரி ப்ளூ சட்டை மாறன் குமட்டில் குத்திச் சொல்லத் தோன்றுகிறது.. அவர் போட்டு வரும் டிவீட்டுகளைப் பார்த்தால்.

ப்ளூ சட்டை மாறனோட விமர்சனங்கள்தான் வில்லங்கமாக இருக்கும் என்றால் அவர் சமயத்தில் போடும் டிவீட்டுகள் அதி பயங்கரமாக இருக்கின்றன. யாரையாவது வம்பிக்கிழுக்க முடிவு செய்து விட்டால் உடனே இறங்கி விடுகிறார்.. இறுதி வரை வச்சு செஞ்சு விடுகிறார்.




இப்போது அவரிடம் விஜய் சிக்கியிருக்கிறார். தொடர்ந்து விஜய்யை சீண்டியும், விஜய் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தும் விடாமல் டிவீட் போட்டுக் கொண்டே இருக்கிறார். இதில் இடையில் அஜீத்தையும் லைட்டாக டச் செய்து விட்டுப் போயிருக்கிறார் மாறன்.

விஜய்யின் கார் சிக்னலை மதிக்காமல் போய் விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடாக போய்க் கொண்டிருக்கின்றன. சூட்டோடு சூடாக ப்ளூ சட்டை மாறனும் புகுந்து களமாடிக் கொண்டிருக்கிறார்.

விஜய் கார் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து கூடவே, மாணவ மணிகளே, நண்பா..நண்பிகளே.. கமாண்டரை  இப்படியான விசயங்களில் பின்தொடராதீர். இதை உங்கள் பெற்றோர், ஆசிரியர்களிடமும் சொல்லவும். இவர் & பிற நடிகர்கள் இப்படி நிஜம் மற்றும் திரையில் சிகரட், சாராயம் உள்ளிட்ட போதைகளை பயன்படுத்துவதையும் உபயோகிக்காதீர் என்று அவர் போட்ட டிவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக சாடிக் கொண்டுள்ளனர்.




அடுத்து இன்னொரு டிவீட் போட்டுள்ளார். அது சாலை விதியை மதிக்காமல் கார் ஓட்டியதற்காக விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான டிவீட். அதில்,  மாணவ செல்வங்களே.. சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்.  வேலைக்கு செல்லும் இளையோர்களே வேகத்தை விட விவேகம் (படத்த சொல்லல) முக்கியம். ஏன்னா.. நமக்கு 500  ரூபா என்பது 10 கிலோ அரிசி வாங்கற பணம் என்று கூறியுள்ளார் மாறன்.

இந்த டிவீட்டில் போகிற போக்கில்  அஜீத் ரசிகர்களுக்கும் ஒரு ஊமைக் குத்து குத்தி விட்டுப் போயுள்ளார் மாறன்.. வேகத்தை விட விவேகம் (படத்தை சொல்லலை) முக்கியம் என்று அவர் கூறியிருப்பது அஜீத் ரசிகர்களையும் சீண்டுவதாக உள்ளது.

என்னவோ போண்ணே.. ஒரு முடிவோடதான் போட்டுத் தாக்கிட்டிருக்கிற!

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்