ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது லஞ்ச வழக்கு

May 13, 2023,10:14 AM IST
டில்லி : போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் ஆர்யான் கானை சேர்க்காமல் இருப்பதற்காக சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை துவங்கப்பட்டு, மும்பை, டில்லி, ராஞ்சி, கான்பூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைமை அதிகாரியாக உள்ளார் வான்கடே. இவர் தலைமையிலான படையினர் 2021 ம் ஆண்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அங்கு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் இருந்தார். அவரை போதை வழக்கில் அதிகாரிகள் செய்தனர்.



இந்த வழக்கில் நான்கு வாரங்கள் வரை ஆர்யான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ம் ஆண்டு மே மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய ஆர்யான் மீதான அனைத்து போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, வான்கடே தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் பல தவறுகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

அதோடு கடந்த ஆண்டு மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வரித்துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார் வான்கடே. தற்போது அவர் மீது லஞ்ச கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்