டெல்லி : சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவுகூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் 134 அடி உயரத்தில்ண பேனா வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்.
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்குகள் பலவும் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் படி மத்திய அரசிற்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இன்று அனுமதி அளித்துள்ளது.
கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
{{comments.comment}}