சென்னை: ராகவா லாரண்ஸ் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு ஆகியோர் நடிக்க உருவான படம்தான் சந்திரமுகி. மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரதாழ் என்ற படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி. ஆனால் மலையாளப் படத்தை விட மிகப் பிரமாண்டமாக, பிரமாதமாக இது உருவாகி வெளியாகி மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
தமிழ்த் திரையுலகில் வசூலை வாரிக் குவித்த மிக சில படங்களில் இதுவும் ஒன்று. அந்தப் படத்தின் இரண்டாம்பாகத்தை தற்போது பி.வாசு எடுத்துள்ளார். இதிலும் ரஜினியையே நடிக்க வைக்க அவர் முயன்றார். ஆனால் அவர் மறுத்து விடவே ராகவா லாரண்ஸை நடிக்க வைத்துள்ளார் பி.வாசு.
வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், கங்கனா ரனாவத் என பலரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்று நம்பலாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}