"அந்த நிலாவைத்தான்"... 4313 கி.மீ. தூரத்தில் நெருங்கியது சந்திரயான் 3!

Aug 07, 2023,09:49 AM IST
பெங்களூரு : நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 நிலவிற்கு 4313 கி.மீ.,  தூரத்தில் உள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14 ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஜூலை 15 ம் தேதியில் இருந்து ஜூலை 25 ம் தேதி வரை பூமியின் 5 நீள்வட்ட பாதைகளையும் சுற்றி வந்தது. ஆகஸ்ட் 1 ம் தேதி 1.2 லட்சம் கி.மீ., தூரத்திற்கும் அதிகமான தூரத்தில் சந்திரயான் 3 இருந்து வந்தது. ஆகஸ்ட் 01 ம் தேதி நிலவின் நீள்வட்ட பாதைக்குள் சந்தியான் 3 நுழைந்தது. இதையடுத்து சந்தியான் 3 ன் ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரோ கண்காணித்து, தகவல் வெளியிட்டு வருகிறது. 



ஆகஸ்ட் 06 ம் தேதியான நேற்று, சந்திரனின் 3 வட்ட பாதைகளின் பயணத்தை சந்தியான் 3 நிறைவு செய்தது. சந்திரயான் 3 நிலவை நெருங்குவதற்கு முன் விக்ரம் மற்றும் பிரக்யான் விண்கலன்கள் சந்தியான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவின் வெளிப்புற செயல்பாடுகளை ஆய்வு செய்யும். சந்திரயான் 3 நிலவை நெருங்கும் தூரம் 18,074 கி.மீ.,லிருந்து 4313 கி.மீ., ஆக குறைந்துள்ளதாக இஸ்ரோ தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 09 ம் தேதி நிலவின் வெளிப்புற பாதையை சென்றடையும் என்றும், ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 05.47 மணிக்கு நிலவில் சந்திரயான் 3 தரயிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான் 3 தரையிறங்க உள்ளது.

இதற்கிடையே நிலவை நெருங்கி வரும் வீடியோ ஒன்றை சந்திரயான் 3 படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த வீடியோவைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் நிலவை நோக்கி நகர்வது போன்ற பிரமிப்பையும், சந்தோஷத்தையும் அது ஏற்படுத்துகிறது. இந்தியாவின் சாதனைகளின் உச்சமாக இந்த நிலவுப் பயணம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்