சென்னை : அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷன் முடிவெடுக்கலாம் எனக்கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை விதிக்கக் கோரியும் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தலைமை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும், கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேர்தல் கமிஷன் ஒப்புதல் தரக்கோரியும் இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி வழக்கை முடித்து வைத்தது. இருந்தாலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் இறுதி வாதம் நடைபெறும் என கூறப்பட்டிருந்த படியே இறுதி வாதம் நடைபெறும் என இரண்டு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
{{comments.comment}}