"முதல்வருக்கு நன்றி".. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நெகிழ்ச்சி!

Jul 02, 2023,03:05 PM IST
சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர் ஜீவால் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் கண்டிப்பான அதிகாரியான சங்கர் ஜீவால் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். ஆவடியின் முதல் போலீஸ் கமிஷனர் இவர் என்ற பெருமையும் ரத்தோருக்கு உண்டு.



மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் டிவீட் போட்டுள்ளார். அதில்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட வாய்ப்பளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையின் 109வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது முந்தைய கமிஷனர்கள் செய்த சிறப்பான பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்